fbpx
Homeபிற செய்திகள்115 பெண் காவலருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை: ஒரேநாளில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாதனை

115 பெண் காவலருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை: ஒரேநாளில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாதனை

இந்தியாவிலேயே ஒரே நாளில் 115 பெண்களுக்கு 3D மேமோக்ராம் மார்பகபுற்று நோய் பரிசோதனையை செய்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கே.எம்.சி.ஹெச்.) சாதனை புரிந்துள்ளது.

மார்பக புற்று நோய் நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் 2 பெண்களுக்கு ஒருவருக்கு முற்றிய நிலையில் தான் மார்பகபுற்று நோய் கண்டு பிடிக்கப்படுகிறது. அறிகுறி இல்லா மலிருந்தாலும் கூட மார்பகபுற்று நோயை பரிசோதனை மூலம் கண் டுபிடித்து விடலாம்.

கே.எம்.சி.ஹெச். சமீபத்தில் உலகின் முன்னணி தயாரிப்பு நிறு வனமான ஹோலோஜிக் அதிநவீன 3D மேமோகிராபி கருவியை பெற்றுள்ளது.

இந்த கருவியில் எடுக் கப்படும் படம், மிகவும் துல்லியமாக இருப்பதோடு, 4 நொடிகளில் உயர்தர 3D படமாக கிடைக்கும். உலகிலேயே இதுதான் துல்லிய தர மிக்க படம் தரும் இயந்திரம் ஆகும்.

கே.எம் .சி.ஹெச். தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, கோவை மாநகர பெண் காவ லர்களுக்கு இலவச மார்பக புற்று நோய் பரிசோதனை செய்ய மருத் துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாநகர காவல் ஆணையாளர் தீபக் தமோர், மாநகர குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் உமா ஆகியோரின் ஒப்புதலின் பேரில், மார்பக சிகிச்சை மைய நிபுணர் டாக் டர் ரூபா, முதலில் மார்பகபுற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச் சியை நடத்தினார்.

இலவச 3ஞி மேமோக்ராம் பரிசோதனை கே.எம்.சி.ஹெச். மார்பக சிகிச்சை மையத்தில் நடந்தது. இதில் 115 பெண் காவலர்கள் பரிசோதனைகளை மேற் கொண்டனர். இந்தியாவிலேயே ஒரேநாளில் 115 பெண்களுக்கு 3D மேமோக்ராம் மார்பக பரிசோதனை செய்வது இதுவே முதன்முறையாகும்.

கே.எம்.சி.ஹெச். நிர்வாக இயக் குனர் மருத்துவர் அருண் பழனிசாமி, நம்மை காக்கும் காவலர்களை நாம் பாதுகாப்பது நம் கடமை என, தெரிவித்துள்ளார். கே.எம்.சி.ஹெச். கதிரியக்கவியல் துறை தலைவர் டாக்டர் மாத்யூ செரியன், கோவை மெடிக்கல் சென்டரில், மார்பக மருத்துவ மையம் உருவாக்குவது நமது மருத் துவமனை தலைவரின் கனவு.

அது இந்தியாவிலேயே சிறந்த மார்பக மருத்துவ சிகிச்சைமையமாக உருவாகியுள்ளது, என பாராட்டி யுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img