கோவை மாநகராட்சி 100வது வார்டில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கிறிஸ்டி சகாயம் சுயேட்சையாக உலக உருண்டை சின்னத்தில் கிறிஸ்டி சகாயம் போட்டியிடுகிறார்.
அவர் வார்டு முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
அப்போது பொதுமக்க ளிடம் தான் வெற்றி பெற்றால் என்னென்ன செய்வேன் என்ற பல்வேறு வாக்குறுதிகளையும் தெரிவித்து வருகிறார்.
தனது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வேட்பாளர் கிறிஸ்டி சகாயம் கூறியதாவது: சுகாதாரம், குடிநீர், சாலை, மின் விளக்குகள், பொது கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன், தினமும் மக்களைச் சந்தித்து குறைகளைத் தீர்ப்பேன்.
மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு அதற்கான பயிற்சி, உபகரணங்கள் வழங்கப்படும். புற்று நோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதித்தோருக்கு இலவச மருந்துகள் வழங்கப்படும்.
பிறக்கின்ற குழந்தைகளுக்கு தங்க காசு வழங்கப்படும். துக்கம் நடக்கும் அனைத்து இல்லங்க ளில் ப்ரீசர் பாக்ஸ், சாமியானா, டேபிள் & சேர் வசதி களை இலவசமாக ஏற்பாடு செய்து தருவேன்.
பொது நூலகம் அமைப்பேன் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெற்றுத் தருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



