இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது: நாட்டில் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்படும்போது 100 பாரம்பரியச் சின்னங்களுக்கு தேசியக் கொடியின் வண்ணத்தில் ஒளியூட்ட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது அதற்கான பணிகளில் தொல்துறை ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. செங்கோட்டை, குதுப்மினார், ஹூமாயூன் கல்லறை, துக்ளகாபாத் கோட்டை, பதேபூர் சிக்ரி, ஆக்ரா, ராமப்பா கோயில், தாஜ்மஹால் உள்ளிட்ட 17 யுனஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் உட்பட நாடு முழுவதும் 100 பாரம்பரியச் சின்னங்கள் தேசியக் கொடியின் வண்ணத்தில் ஒளியூட்டப்படும்.
சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், விஞ்ஞானிகள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்றை துணிச்சலுடன் எதிர்த்து போராடும் மக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஒளியூட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.



