குழந்தைகளை பள்ளிக்கு வரக்கூறி ஆசி ரியர்கள் கட் டாயப் படுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரி வித்துள்ளார்.
கோவையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளி திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றன. பெற்றோர்கள் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொறுத்தே அடுத்தகட்ட முடிவு செய்யப்படும்.
கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை பள்ளிக்கு வர ஆசிரியர்கள் கட் டாயப்படுத்தக்கூடாது என்று அறிவு றுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான சட்டப் போராட்டம் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



