fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் துவக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் துவக்கம்

இந்திய அரசின் இளைஞர் நலன் மற் றும் விளையாட்டு அமைச்சகத்தின் சென்னை மண்டல நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் ‘நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டுமுகாம்’, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நேற்று (டிச.14)தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயண சுவாமி தலைமை வகித்து பேசும்போது, ‘நம்முடைய நாட்டின் வளர்ச்சியில் இளைய சமுதாயத்தினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

குறிப்பாக நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. நாட்டின் ஒருமைப் பாட்டின் சக்தியாக இவர்கள் விளங்கு கின்றனர். நம் முடைய கல்லூரிக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு நாம் பங்களிக்க வேண்டும்.

நம்முடைய கோவை மாவட்டம் ஜவுளித் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண் டுள்ளது. கோவை மாவட்டத்தின் சிறப்பை, பெருமையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்’ என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்ஜி.எஸ்.சமீரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய ஒருமைப்பாட்டு முகாமிற்கான சின்னம் மற்றும் முகாம் கையேடு ஆகியவற்றை வெளியிட்டார்.

பாரதியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் பெ.காளிராஜ், முகாமைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, கோவை தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் நகர மாகும். தொழிலதிபர்கள், தொழில் முனைவர்கள், கல்வியா ளர்கள் இங்கு உருவாகி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

பாரதியார் பல்கலைக் கழக நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) முனைவர் ஆர். அண்ணாதுரை, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் சி.வி.ராம் குமார், ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமுதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீராம கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் எஸ்.பிரக தீஸ்வரன் நன்றி கூறினார்.

இத்தேசிய ஒருமைப்பாட்டு முகாம் வரும் 20-ம் தேதி வரை 7 நாள் நடைபெறுகிறது.

படிக்க வேண்டும்

spot_img