கொரோனா தொற்று நோய் ஒழிப்புப் பணி, விழிப்புணர்வு பணி உள்ளிட்ட சமூக சேவை களைச் செய்த ஸ்ரீகிருஷ்ணா பாராமெடிக்கல்கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
தர்மபுரி மாவட்டத்தில் 14 ஆண்டுகளாக இயங்கி வரும், ஸ்ரீகிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில், 2020-2021-ம் ஆண்டில் டி.கலையரசி டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி, எம்.ஜோதி பாசு டிப்ள மோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி, டி.குணசேகரன் டிப்ளமோ இன்மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி ஆகிய மூன்று மாணவர்களும், அரசு பொது சுகாதாரத் துறை சார்பாக சமூக விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டனர்.
எஸ். சம்பத் புள்ளி விவர உதவியாளர், இராசன் பாபு மாவட்ட கல்வியாளர், மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல மாவட்ட குடும்ப செயலகதில் பணிபுரியும் அனைவரும் ஒன்றிணைந்து ஸ்ரீகிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசு, பதக்கங் கள், புத்தகங்கள் வழங்கும் விழாவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி பேராசிரியர் மகேஸ்வரி கல்லூரி துணைச் சேர்மன் மருத் துவர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



