வெல்ஸ்பன் ஒன் லாஜிஸ்டிக்ஸ் பார்க்ஸ் உடன் தமிழக அரசு ரூ.2,500 கோடி நேரடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. வெல்ஸ்பன் ஒன் லாஜிஸ்டிக்ஸ் பார்க்ஸ் (WOLP), ஒரு நாடு தழுவிய ஒருங்கிணைந்த நிதி, வளர்ச்சி, சொத்து மேலாண்மை நிறுவனம்.
3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட வெல்ஸ்பன் குழுமத்தின் ஒரு பிரிவாக இந்தநிறுவனம் செயல்பட்டு வருகிறது.
முதலீட்டை ஊக்குவிக்கவும், ஒற்றைச் சாளர அனுமதி முறை சார்ந்தும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டு முகவராகச் செயல்பட்டு வரும் கய்டன்ஸ் நிறுவனத்துடன் WOLP எம்.ஓ.யு. ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். நேரடி முதலீடாக தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் ரூ. 2,500 கோடியைக் கொண்டு இந்தத் திட்டங்களை வெல்ஸ்பன் ஒன் லாஜிஸ்டிக்ஸ் பார்க்ஸ் நடை முறைப்படுத்தும்.
இந்த ஒப்பந்தம், தமிழ்நாடு அரசுக்கும் வெல்ஸ்பன் ஒன் லாஜிஸ்டிக்ஸ் பார்க்ஸ் இரண்டுக்கும் இடையிலான ஆழமான உறவை வெளிப்படுத்துவதுடன், மாநி லத்துக்குள் லாஜிஸ்டிக்ஸ் கட்டு மானத்தை மேம்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
இதன் வழியாக செய்யப்படும் முதலீடுகளின் அடிப்படையில் கிடைக்கும் சமூக, பொருளாதாரப் பலன்களை மனதில் கொண்டு, WOLP மூலம் முன் மொழியப்படும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக ஒற்றைச் சாளர அனுமதி வழங்க, தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் தொழில் தொடங்கும் ஒட்டு மொத்த நடைமுறை எளிதாகும்.
இந்த கூட்டு முயற்சி குறித்து வெல்ஸ்பன் ஒன் லாஜிஸ்டிக்ஸ் பார்க்ஸ்நிர்வாகஇயக்குநர்அன்ஷுல்சிங்கால்கூறுகையில், “தமிழக அரசுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொண்டதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
கய்டன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பூஜாகுல்கர்னி கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளில் லாஜிஸ்டிக்ஸ் கட்டுமானம், பல்வேறு ஒழுங்கு விதிமுறைகள், அடிப்படை சீர்திருத்தங்கள் சார்ந்து இந்தியா பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஜிஎஸ் டி நடைமுறைக்கு முன்னர், வரி செலுத்துவதைக் குறைப்பதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் சிறு சேமிப்புக் கிடங்குகளை அதிக எண்ணிக்கையில் வைத்திருந்தன” என்றார்.



