fbpx
Homeபிற செய்திகள்வி நிறுவனத்தின் 5 ஜி பரிசோதனை ஓட்டத்தில் உச்சவேகம் பதிவு

வி நிறுவனத்தின் 5 ஜி பரிசோதனை ஓட்டத்தில் உச்சவேகம் பதிவு

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடஃ போன் ஐடியா லிட் நிறுவ னம், அதற்கு அரசால் ஒதுக்கீடு செய்யப் பட்ட 5ஜி அலை வரிசைக்கான பரிசோதனை ஓட்டத்தை, தொழில் நுட்ப வர்த்தகர்களுடன் இணைந்து, புனே (மகாராஷ்டிரா) மற்றும் காந்திநகர் (குஜராத்) ஆகிய நகரங்களில் மேற்கொண்டது.

புனே நகரத்தில் வி நிறுவனமானது 5ஜி அலை வரிசையின் பரிசோதனை முறையிலான ஒளிபரப்புக்கான என்ட்டூ என்ட் கிளவுட்கோர் சோதனைக் கூடத்தை நிறுவி, புதிய தலை முறை டிரான்ஸ்போர்ட் மற்றும் ரேடியோ ஆக்சஸ் நெட்வொர்க் மூலம் இச்சோத னையை மேற்கொண்டது.

இந்த பரிசோதனை ஓட்டத்தில் வி நிறுவனம் உச்சபட்ச வேகமாக 3,7 Gbps-க்கும் கூடுதலான வேகத்தை mmWave அலை வரிசையில் தரவை அடிப்படையாக கொண்டு வாடிக்கையாளர்கள் மேற் கொள்ளும் செயல்களுக்கு வெப் அப் ளிகேஷன்கள் மிகமிக குறைவான தாமதத்தில் தகவல் பரிமாற்றத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

5ஜி அல்லாத நெட்வொர்க் கட்டமைப்பில் என்ஆர் ரேடியோக்கள் வாயிலாக நவீன உபகர ணங்களை பயன்படுத்தி இந்த வேகம் எட்டப்பட்டுள்ளது.

5ஜி பரிசோதனை நெட்வொர்க்கின் போது, வி நிறுவனம், புனே மற்றும் காந்தி நகரில் அதன் தொழில் நுட்ப அசல் உபகரண உற்பத்தி கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து 3.5GHz அலை வரிசையில் உச்ச பட்சமாக பதிவிறக்க வேகம் 1.5 Gbps ஐ எட்டி சாதனை படைத்துள்ளது.

இந்த பரிசோதனை ஓட்டம் குறித்து வோடஃபோன் ஐடியாலிட் சிடிஓ ஜக்பீர் சிங் கூறுகையில், அரசு ஒதுக்கிய 5ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசையில், எங்களது தொடக்க நிலை 5ஜி பரிசோதனை, குறைவான தாமதத்துடனான தகவல் பரிமாற்றம் மற்றும் சிறந்த வேகத்தை எட்ட முடிந்தது.

தயாராக இருக்கும் 5ஜி நெட்வொர்க் மூலம், தற்போது பரிசோதனை முயற்சியாக அடுத்த தலைமுறை 5ஜி தொழில் நுட்பத்தை வழங்க முடிவதன் மூலம் நிறுவனங்களுக்கும், வாடிக் கையாளர்களுக்கும் உண்மையான டிஜிட் டல் அனுபவத்தை எதிர்காலத்தில் தர இயலும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img