fbpx
Homeபிற செய்திகள்வளர்ச்சி விகிதத்தால் 19.1 சதம் பலன் டிஎஸ்பி பிளக்ஸி கேப் பண்ட் அறிவிப்பு

வளர்ச்சி விகிதத்தால் 19.1 சதம் பலன் டிஎஸ்பி பிளக்ஸி கேப் பண்ட் அறிவிப்பு

டிஎஸ்பி முதலீட்டு மேலாளர் கள், டிஎஸ்பி பிளக்ஸி கேப் நிதி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை அறி வித்துள்ளனர். 1997ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி துவக்கப்பட்ட இந்த நிதியானது, பல்வேறு பங்குச் சந்தை ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளது.

துவங்கப்பட்ட நாளிலிருந்து ஆண்டு வளர்ச்சி விகிதத்தால் 19.1 சதம் பலனை அளித்துள்ளது. அப்போது ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந் தால், அது தற்போது 78 லட்ச ரூபாயாக வளர்ச்சி பெற்றிருக்கும். இதே கால அளவில் நிப்டி 500 டிஆர்ஐ வளர்ச்சி 31.74 லட்சம் ரூபாயாக உள்ளது.

டிஎஸ்பி பிளக்ஸி கேப் பண்ட், வணிக வளர்ச்சி, கவனமிக்க மேலாண்மை, நிலையான வளர்ச்சி (பிஎம்ஜி பிரேம் ஒர்க்) போன்ற கட்டமைப்புகளைக் கொண்டு அணுகுமுறையை கொண்டது.

குறைவான முதலீட்டில் வேகமான பணமாற்றம், சந்தை பங்கில் உயர்வு, சரியான முதலீட்டு பகிர்வு மற்றும் உயர்ந்த அளவு மார்ஜின் ஆகியவற்றால் பங்கு வருவாய் கணிசமாக உயர்ந்தது.

டிஎஸ்பி பிளக்ஸி கேப் பண்ட் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டு வளர்ச்சி விகிதம் குறைந்தபட்சம் 6.9 சதவீதத்திலிருந்து அதிக பட்சம் 33.5 சதவீதமாக இருந்தது. பங்குகளைப் போலவே ஒட்டுமொத்த மதிப்பில் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருந்தது.

பொறுமையாக காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு நல்ல வளர்ச்சியை அளித்துள்ளது. டிஎஸ்பி பிளக்ஸி கேப் நிதியை, அடுல் போலே மற்றும் அபிஷேக் கோஷ் ஆகியோர் நிர்வகித்தனர்.

டிஎஸ்பி முதலீட்டு மேலாளர் கள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கல்பென் பரெக் பேசுகையில், “டிஎஸ்பி பிளக்ஸி கேப் பண்ட், ஒரு ஒழுங்கு முறையான முதலீட்டு வரையறையை கொண்டிருந்தது.

பல்வேறு பங்கு ஏற்றத்தாழ்வு சுற்றுக்களை சந்தித்தது. இந்த நீண்ட கால முதலீட்டில் 36 முதலீட்டாளர்கள் மட்டுமே தற்போதும் முதலீடு செய்து வருகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து முதலீடு செய்து வந்த பல லட்சம் முதலீட்டாளர்கள், சிபாரிசு செய்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநி யோகஸ்தர்களுக்கு மிக்க நன்றி,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img