fbpx
Homeபிற செய்திகள்ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கணிப்பாய்வு குழுக்கூட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்தி நவாஸ்கனி எம்.பி. பேச்சு

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கணிப்பாய்வு குழுக்கூட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்தி நவாஸ்கனி எம்.பி. பேச்சு

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக் குழுக்கூட்டம் கணிப்பாய்வுக் குழுத் தலைவர் மற்றும் ராமநாதபுரம் நாடா ளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தலைமையில் நடை பெற்றது.

ஒன்றிய அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறை வேற்றுவது மற்றும் ஆலோ சனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் நோக்கமாகும்.

ஒன்றிய அரசின் திட்டப் பணிகள் செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வு கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை,கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரி வீடுகள் திட்டம், தூய்மை பாரத திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், சத்துணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் பயன்பாடு முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

இதில் கணிப்பாய்வுக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி பேசியதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை முன்னுரிமை கொடுத்து விரைவில் வழங்க வேண்டும், சிறுபான்மையினர் மக்களுக்கு தொழில் துவங்குவ தற்கு மானிய கடன் வழங் குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் புதி யதாக அறிவிக்கப்பட்டுள்ள உழவர்சந்தை, துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் விளையாட்டு மைதானம், தொழில்பயிற்சி பள்ளி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வரு வாய்த்துறையினர் விரைவில் தேவையான நிலத்தினை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை விரைவில் செயல்படுத்தவும், தகுதியுடைய பயனாளிகள் அனைவருக்கும் முதியோர், விதவை மாதாந்திர உதவித் தொகை வழங்கிடவும், குடிசை மாற்று வாரியம் மூலம் நகராட்சி, பேரூராட்சிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கவும், திடக்கழிவு மேலாண்மை திட் டத்தை சிறப்பாக செயல் படுத்தவும், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சீரான வகையில் பொதுமக்களுக்கு குடி நீர் வழங்கிட ஆவன செய்ய வேண்டும்.

கீழக்கரை முதல் ராமநாதபுரம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணியினை விரைவில் முடிக்க நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டும். புற்றுநோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கு பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இழப்பீடு தொகை,உள்ளிட்ட பயிர் காப்பீட்டு அம்சங்களை விவசாயிகளிடம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முற்றிலும் சேதம டைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்தி புதியதாக பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து மக்களின் கோரிக்கைக ளையும் முழுமையாக நிறை வேற்ற ஒன்றிய அரசின் சம்பந் தப்பட்ட அமைச்சகத்தில் பரிந் துரைத்து தேவையான நிதி மற்றும் சலுகைகள் உடனே பெற்றுத்தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தேசிய அள வில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட விரு துகளை பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் சாத்தனூர் கிராம ஊராட்சித் தலைவர் ஆகியோர் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார்,வன உயிரின காப்பாளர் ஜக்தீஷ் பகான் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமரேசன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திசைவீரன், மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் வேலுச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள்,நகர் மன்றத் தலைவர்கள், பேரூ ராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img