fbpx
Homeபிற செய்திகள்யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா

யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா

யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கோவை பிராந்திய அலுவலகம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி vigithon என்ற நிகழ்ச்சியை இன்று நடத்தினர்.

கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சந்திப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியை வங்கியின் பிராந்திய தலைவர் ரெஞ்சித் சுவாமிநாதன் (துணைப் பொதுமேலாளர்) துவக்கி வைத்தார்.

பிராந்திய உதவித் தலைவர் ஜி.ரவீந்திரன் (உதவி பொதுமேலாளர்), சாரல் தலைவர் அபிஜித் (உதவி பொதுமேலாளர்) மற்றும் கிளை மேலாளர் கள், அலுவலர்கள் பங்கேற்றனர்,

அண்ணா சிலை சந்திப்பில் அனைவரும் லஞ்சத்தை ஒழிப்போம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

அவர்கள் மத்தியில் பிராந்திய தலைவர் ரெஞ்சித் சுவாமிநாதன் பேசுகையில், அனைவரும் லஞ்சத்தை ஒழித்து உண்மையாக சேவை செய்ய வேண்டும் என வலி யுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img