ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள நுண்ணீர் மற்றும் துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் செய்தியா ளர்களிடம் தெரிவித்தத £வது: ஈரோடு மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமாக அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.42,781-ம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 12.50 ஏக்கர் வரையில் 75 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.33,231-ம் வழங்கப்பட்டு வருகிறது.
கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் சிறப்பு மானியம், அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.19,903-ம் வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தும் விவசாயி களை பெரிதும் ஊக்குவிக்க துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தில் பின்னேற்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, புதிதாக மின் இணைப்பு பெற்று நுண்ணீர் பாசனத் திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் மின்மோட்டார் அல்லது டீசல் பம்பு செட் 50 சதவீத பின்னேற்பு மானியமாக அதிகபட்சம் ரூ.15,000 வரையிலும், மற்றும் பாசனத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் பிவிசி குழாய்கள் நீர் ஆதாரத்தில் (கிணறு, தொட்டி) இருந்து நுண்ணீர் பாசன அமைப்பு வடிப்பு முடிய மட்டும் 50 சதவீத பின்னேற்பு மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டா ரங்களிலும் வேளாண்மை துறை மூலம் இதுவரை 13,191 எக்டர் பரப்பளவு மற்றும் தோட்டக்கலை துறை மூலம் 14,132 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகள் அரசு மானியத்தில் நிறுவப்பட்டு, விவசாயிகள் பெரிதும் பயன்பெற்றுள்ளனர்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மொடக்குறிச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நுண்ணீர் மற்றும் துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகளின் கீழ் 0.95 ஹெக்டேர் பரப்பளவில் அரசு மானியத்துடன் ரூ.1,43,594 மதிப்பிலான சொட்டு நீர் பாசனம் ரூ.40,000 மதிப்பிலான நீர் தேக்கத் தொட்டி, ரூ.13,000 மதிப்பிலான மின் மோட்டார் ஆகியவை அமைக்கப்பட்டு கரும்பு பயிரிடப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவகிரியில் ஈரோடு துல்லிய பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் ரூ.60 இலட்சம் மானியத்துடன் அமைக்கப்பட்டு விதை மற்றும் விதைப்பு பொருட்கள் உற்பத்தி செய்தல் இயக்கம்-விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொந்தளம் ஊராட்சியில், தோட்டக்கலைத் துறையின் சார்பில், பிரதமரின் நுண்ணீர் பாசன மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.93,447 மானியத்துடன் அமைக்க ப்பட்டிருந்த சொட்டு நீர் பாசனத்தினையும், துணை நுண்ணீர் பாசன மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.80,000 மானியத்துடன் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் மற்றும் நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், இணை இயக்குநர் (வேளாண்மை) சின்னசாமி, துணை இயக்குநர் (நுண்ணீர் பாசன திட்டம்) சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், உதவி இயக்குநர் வேலுசாமி (மொடக்குறிச்சி) உள்ளிட்டோர் இருந்தனர்.



