மதுரை மாநகராட்சி மேலவாசல் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
அருகில் மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் உள்ளனர்.



