fbpx
Homeபிற செய்திகள்மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.ஈஸ்வரசாமி தலை மையேற்று, துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் மடத்துக்குளம் வட்டாரத்தில் உள்ள படித்த, வேலை
வாய்ப் பற்ற இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பை வழங்குவதற்காக, 30க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசுத¢துறை அத¤கார¤கள¢ மற¢றும¢ மடத்துக்குளம் மத்திய ஒன்றிய த¤முக பொறுப்பாளர் ராமசாமி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img