மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களில் உயர் இரத்த அழுத்தம் நோய் பாதிப்பு உட்பட்ட பல நோய்களுக்கு மொத்தம் 1,54,898 நபர்கள் முதல் முறையாக சேவை பெற்றுள்ளனர்.
நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு மொத்தம் 3,13,285 நபர்கள் தொடர் சேவை பெற்று வருகின்றனர்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் கடைகோடி கிராம மக்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, பிற மாநிலங்களே வியந்து பாராட்டும்படியும், இது நமது அரசு என்று பொதுமக்கள் அனைவரும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கடந்த 05.-08-.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமணப்பள்ளி கிராமத்தில் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் பொதுமக்கள் குடியிருக்கும் வீட்டினைத் தேடி அவர்களுக்கு சேவை செய்யும் ஒரு புனிதமான திட்டமாகும்.
இத்திட்டத்தின் வாயிலாக பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய் (என்சிடி) நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், வயது முதிர்ந்த நபர்களுக்கு சேவை செய்தல், அவர்களுக்கு முடநீக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்தல், தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய வலி நிவாரணம் ஆதரவு சிகிச்சை, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல், தாய்மார் களுக்கு பிரசவத்திற்கு பிந்தைய சேவை போன்ற நல்ல நோக்கத் துடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற புதிய திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வரு கின்றன.
பரிசோதனையும் தொடர் கண்காணிப்பும்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் குறிப்பாக 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியா ளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான மருத்துவம் திட்டத்தின் மூலம் அதற்கு பரிசோதனை செய்தும், அனைத்து வகை சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமுதாய நலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
களப்பணியாளர்கள்
இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத் தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலைச் சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் பங்கு பெறுவர்.
பொது சுகாதாரத் துறையின் களப்பணியாளர்கள் இக்கு ழுவினரின் செயல்பாடு களைக் கண்காணித்து வழிநடத் துவார்கள். ஒவ்வொரு வட்டாரத் திலும் இத்திட்ட த்திற்கென சிறப்பாக வடிவமைக்க ப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்படும்.
“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் கூறியதாவது:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களில் உயர் இரத்த அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்ட 61520 நபர்களும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 39501 நபர்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 30345 நபர்களும், நோய் ஆதரவு சிகிச்சை 9709 நபர்களும், இயன்முறை சிகிச்சை13810 நபர்களும், சிறு நீரக நோய்க்கு சுய டயாலிஸிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் பெற்றவர்கள் 11 நபர்களும் என மொத்தம் 1,54,898 நபர்கள் முதல் முறையாக சேவை பெற் றுள்ளனர்.
உயர் இரத்த அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்ட 1,23,356 நபர்களும், நீரிழிவு நோயி னால் பாதிக்கப்பட்ட 82344 நபர்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 63263 நபர்களும், நோய் ஆதரவு சிகிச்சை 20632 நபர்களும், இயன்முறை சிகிச்சை 23678 நபர்களும், சிறு நீரக நோய்க்கு சுய டயாலிஸிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் பெற்றவர்கள் 14 நபர்களும் என மொத்தம் 3,13,285 நபர்கள் தொடர் சேவை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
காலில் இடித்தது கலப்பை வீடு தேடி வந்தது சிகிச்சை
“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் பயனடைந்த தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா மலைப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பயனாளி கணேசன் கூறியதாவது:
நான் உழவுத் தொழில் செய்யும்போது, கால் கலப்பையில் பட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்வதற்கு அசௌ கரியம் ஏற்பட்டது.
எனவே, மருத்துவமனையில் எனது கிராமத்துக்கு அருகாமையில் உள்ள ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் கொடுத்து என்னுடைய வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஆண் செவிலியர் பொன்ராஜ், வீட்டுக்கு வந்து காலில் ஏற்பட்ட புண்ணிற்கு மருந்திட்டும், ஊசி, மாத்திரைகள் தந்து சிறப்பாக சேவை செய்தார். அதனால் வெகு விரைவில் புண் ஆறிவிட்டது.
தற்போது நான் சிறிதளவு நடக்கும் அளவுக்கு புண் குணமாக உள்ளது. என்போன்ற ஏழை, எளிய மக்களுக்கு உதவும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்வருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
குறைந்தது பணச் செலவு பிறந்தது குடும்பத்தில் நிம்மதி
“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் பயனடைந்த முடிவைத்தானேந்தலை சேர்ந்த க. ஆதிலெட்சுமி மகள் மகேஷ்வரி தெரிவித்ததாவது:
எனது தாயார் கடந்த 6 மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அதிக பணச் செலவில் சிஏபிடி டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், இப்போது, முதல்வர் அறிமுகம் செய்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக எங்களுக்கு எவ்வித பணச் செலவுமின்றி இலவசமாக சிஏபிடி டயாலிஸிசிற்கு தேவையான அனைத்து மருந்துகளும் அரசு மருத்துவமனையின் மூலமாக வீட்டிற்கே வந்து தருகின்றனர்.
இத்திட்டம் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தை அறிமுகம் செய்த முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொகுப்பு:
சு.ஜெகவீரபாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
எஸ்.செல்வலெட் சுஷ்மா,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தூத்துக்குடி மாவட்டம்.



