தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்கள் விரைவில் பழைய கம்பீரத் துடன் மீண்டெழும் என வத்தல்மலையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித் தார்.
தருமபுரி மாவட்டம் வத்தல்மலை மலைக் கிராமத்தில் பெரியூர் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று மாலை பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுடன் தமிழக முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடியதுடன், வத்தல் மலைமலை கிராமத் துக்கு பேருந்து வசதி உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முன்னதாக, விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘கலைஞர் வருமுன் காக்கும் திட்டம்‘ என்ற திட்டம் சேலத்தில் தொடங்கி வைக்கப் பட்டது.
கடந்த திமுக ஆட்சியின் போதே செயல் பாட்டில் இருந்த திட்டம் தான் இது. மீண்டும் தற் போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் அந்த திட்டத்துக்கு புத் தாக்கம் தரப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் நடப்பது என் ஆட்சி அல்ல. நம் ஆட்சி, நம் எல் லோருக்குமான ஆட்சி இது.
மருத்துவத்தை தேடி மக்கள் சென்ற நிலையை மாற்றி, நோய் பாதிப்புக்கு உள்ளான ஏழை, எளியவர்களைத் தேடி வீட்டுக்கே சென்று சிகி ச்சை அளிக்கும் சூழலை இந்த ஆட்சி ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாக அழிக்கப் படவில்லை என்றாலும் ஓரளவு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.
தேர்தலுக்கு முன்பு கட்சிகள் அளிக்கும் வாக் குறுதிகளை, வெற்றி பெற்ற பின்னர் முழு மையாக நிறைவேற்று கிறார்களா எனத் தெரி யாது. ஆனால், திமுக சார்பில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன.
மரவள்ளி உழ வர்கள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்களை சந்தித்து கோரிக்கைகள் கேட்டறியப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக் கையை படிப்படியாக நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளோம். கண்டிப்பாக செய்து தரு வோம்.
மக்களின் தேவையை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தரும் அரசுதான் திமுக அரசு. மகளிர் சுய உதவிக் குழுவை முன்னாள் முதல்வர் கருணாநிதி தருமபுரி மாவட்டத்தில்தான் முதன் முதலில் தொடங்கி வைத் தார்.
அப்போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக் கப்பட்டு சுழல்நிதி, வங்கிக் கடன், மானியம் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி மகளிர் சுய சார்புடன் வாழ வழி செய் யப்பட்டது.
இடையில் 10 ஆண்டுகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல சிரமங்களை எதிர் கொண்டன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் பழைய கம்பீரத்துடன் விரைவில் மீண்டெழும் வகையில் தமிழக அரசு அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளது. இவ்வாறு பேசி னார்.
பின்னர், தோட்டக் கலை துறை சார்பில், வள்ளல் அதியமான் கோட்டம் வடிவில் காய்க றிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த கண் காட்சியை முதல்வர் பார் வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, தருமபுரி, பென்னாகரம் எம்எல்ஏ-க்கள் வெங்கடேஸ்வரன், ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



