ஈரோடு வீரப்பன் சத்திரம் மற்றும் காளைமாட்டு சிலை அருகே என இரண்டு இடங்களில் மக்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க., கடந்த 9 மாதத்திற்கு முன்பு பொறுப்பேற்கும் போது, கொரோனா 2வது அலை என்ற மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலை யில் தான் ஆட்சி அமைத்தோம். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கும் போது எந்த மருத்துவமனையிலும் இடம் இல்லை.
இடம் இருந்தால் படுக்கை இல்லை. படுக்கை இருந்தால் ஆக்சிஜன் வசதி இல்லை. ஊசி, மருந்துகள் இல்லை என்ற அலங்கோல ஆட்சியை அ.தி.மு.க., காரங்க விட்டு போனங்க.
கொரோனா முதல் அலையின் போது அ.தி.மு.க., ஒரு வருடம் ஆட்சி செய்தாங்க. அந்த ஆட்சியின்போது ஒரு கோடி மக்களுக்கு தான் கொரோனா தடுப்பூசி போட்டாங்க. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இல்லை.
அவர்கள் தொடர்ந்து லாக்டவுன் போட்டு மக்களை வீட்டிலேயே முடக்க வைத்தார்கள். தி.மு.க., ஆட்சி அமைத்து இந்த 9 மாத காலத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். தி.மு.க., ஆட்சி மக்களுக்கான ஆட்சி.
கொரோனா காலத்தில் மருத்துவ சிகிச்சை முறையாக மேற்கொள்ளப் படுகிறதா? என கொரோனா மருத்துவமனைக்குள் நேரடியாக சென்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் என்றால் இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர் நம் முதலமைச்சர் தான்.
கொரோனா மூன்றாவது அலை நமது முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த பணிகளால் குறைந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியை விட்டு செல்லும்போது 6லட்சம் கோடி ரூபாய் கடனில் விட்டு சென்றனர்.
கொரோனாவிலும் கொள்ளை அடித்த ஆட்சி தான் அ.தி.மு.க., ஆட்சி.
தி.மு.க., தலைவர் தேர்தல் சமயத்தில் மக்களிடம் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
ஆட்சி அமைத்ததும் ரூ.2ஆயிரம் என இரண்டு தவணை களாக ரூ.4ஆயிரம் கொடுத்தார். மறந்துடாதீங்க. கலைஞர் கருணாநிதி எப்படி தேர்தல் வாக்குறுதிகளில் சொல்வதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என்பாரோ, அதை வழியில் முதல்வரும் செய்தார். மகளிருக்கு பஸ்களில் இலவசம் என்றார் செய்து கொடுத்தார்.
இன்னுயிர் காக்கும்-48 என்ற திட்டம் தமிழகத்தில் செயல்படுத் தினார். மக்களை தேடி மருத்து வம் திட்டத்தில் 5லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். மக ளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
அடுத்ததாக மகளிருக்கான உரிமை தொகை ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என கேட்கிறீர்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாளுக்கு முன் பேசிய பிரசார கூட்டத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
மிக விரைவில் நிதி நிலையை சரி செய்து மகளிருக்கான உரிமை தொகை ரூ.1,000 வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். நாங்க ஆட்சிக்கு வந்தே 9 மாதம் தான் ஆச்சு. அதில், 3 மாதம் கொரோ னாவுடன் மாறடிச்சே போயிடுச்சு.
இந்த 5 மாதத்திலேயே தலைவர் இவ்வளவு சாதனைகளை செய்துள்ளார் என்றால், மக்களுக்காக உழைத்துக்கொண்டுள்ளார். அப்படிப்பட்ட இந்த நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர வேண்டும் என்றால் இங்குள்ள 59 வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும்.
இன்னும் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. இந்த பிரசாரத்தை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். ஈரோட்டில் தோல் தொழிற்சாலையால் ஏற்படும் சுகா தார சீர்கேட்டினை, சரி செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிக்காலத் தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த கருப்பணன் இப்பிரச்சனைக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈரோட்டில் 2 புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
விரைவில் 2 பேருந்து நிலையமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள் விளையாட்டு அரங்குடன், தரமான கல்வியும் அளிக்கப்படும்.
உங்கள் தொகுதி முதலமைச்சர் என்ற திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட 40ஆயிரம் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்து, அந்த குடும்பத் தினருக்கு காணொலி வாயிலாக நலத்திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார்.
சாலை பணிகளும், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
பெருந்துறை அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் 1,300 படுக்கைகள் அமைத்து தரம் உயர்த்தி ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எதிர்கட்சி தலை வர் எடப்பாடி பழனிசாமி, எல்லா இடத்திலும் சட்டமன்றத்தை முடக்குவதாக பேசுகிறார். தமிழக மக்களின் ஆதரவால், அன்பால் வாக்கை பெற்று மக்களாட்சி நடந்து கொண்டிருக்கிறது திமுக ஆட்சி. கடந்த சட்டமன்ற கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோத நிறைவேற்றினோம்.
தி.மு.க., ஆட்சியை பாராளு மன்றத்தில் காங்கிரஸ் பேரியிக்க தலைவர் ராகுல் காந்தி பாராட்டி பேசி இருக்கிறார். மோடிக்கு சவால் விட்டுள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க., இருக்கிற வரைக்கும் பாஜக.,வால் கால் ஊன்ற முடியாதுன்னு ராகுல்காந்தி பேசியுள்ளார். இப்படிப்பட்ட நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர 59 வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.



