fbpx
Homeபிற செய்திகள்‘பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு’: கேபிஆர் கல்லூரியில் வழிகாட்டி கருத்தரங்கு

‘பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு’: கேபிஆர் கல்லூரியில் வழிகாட்டி கருத்தரங்கு

கோவை, அரசூரில் அமைந்துள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பொறியியல் ஆர்வலர்களுக்கு, ‘பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு’ குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

முதலாமாண்டு துறைத்தலைவர் முனைவர் பி. கீதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.அகிலா தலைமை தாங்கி பேசுகையில், கல்லூரியில் மாண வர்களுக்கு அளிக்கப்படும் திறன் பயிற்சிகள், வளாகத்தேர்வில் அதிக ஆண்டு வருமானமாக ரூ.20 லட்சத்தில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள் குறித்து குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிபுணர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பொறியியலில் காணப்படுகின்றன. தேர்ந்தெடுத்த துறையில் தங்களை ஆளு மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

புதுமையான கண்டுபிடிப்புகளை ஆராய்வது, புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவது குறித்த சிந்தனையை கைவிடக் கூடாது. தகவல் தொழில் நுட்பம் அல்லாத பொறியியல் துறையில் கட்டுமானம், இயந்திரவியல், மின்னணுவியல் மற்றும் கெமிக்கல் துறைகளில் வேலைவாய்ப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளன என்றார்.

மதியம் நடைபெற்ற கருத்தரங்கில், சிறப்பு விருந்தினர் எல் அண்ட் டி நிறுவனத்தின் கல்வி பிரிவு தலைமை செயல் அதிகாரி பெபினா பேசும்போது, பொறியியல் மாணவர்களுக்கான வாய்ப்புகள், கட்டுமானத்துறையில் இருக்கும் தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள், மத்திய பட்ஜெட்டில் பொறியியல் துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு, அதனால் பொறியியல் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினர் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டி நிபுணர் அஸ்வின் பேசுகையில், பொறியியல் துறையில் தகவல் தொழில் நுட்பம் அல்லாத துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், இளநிலை படிப்போடு அல்லாமல் மாணவர்கள் முதுநிலை படிப்புகள் சிறந்த கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசால் நடத்தப்படும் கேட் (GATE)
நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

இன்றைய சூழலில் கட்டுமானத்துறையில் சிவில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அரசுத் துறையில் எண்ணற்ற காலிப் பணியிடங்கள் சிவில் துறையில் உள்ளன என்பதை குறிப்பிட்டார். கல்லூரி மாணவர் சேர்க்கை பிரிவுத் தலைவர் கே.ராஜ்குமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img