ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழா அன்று பெண்களின் முன்னேற் றத்திற்காக சிறந்த சேவை புரிந்த தனிநபர் மற்றும் சிறந்த சேவை புரிந்த நிறுவனம் ஆகிய இரண்டு வகையான பிரிவிற்கு முதல்வரின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமு றைகள்: தமிழ்நாட்டை பிறப்பிட மாக கொண்ட வர், 18 வயதிற்கு மேற்பட் டவராக இருத்தல் வேண் டும்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறை களில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நல னுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூகசேவகர் மற்றும் சமூகசேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.
சமூகசேவை நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதா ரரின் கருத்துரு (Booklet)-2 (தமிழ் 1 மற்றும் ஆங்கிலம் 1) மற்றும் Passport Size Photo-2.
இவ்விருதிற்கு விண் ணப்பிக்கும் நபர்கள் உரிய ஆவணங்களுடன் 30.06.2022 மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், பழைய கட்டிடம் தரைத் தளம் (அறை எண்.5) என்ற அலுவலகத்தில் விண் ணப்பம் செய்ய வேண்டும். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.



