fbpx
Homeபிற செய்திகள்புத்துயிர் பெறும் மாநகராட்சி பள்ளி: வகுப்பறை கட்ட ரூ.26 லட்சம் வழங்கிய புரோபல் நிறுவனம்

புத்துயிர் பெறும் மாநகராட்சி பள்ளி: வகுப்பறை கட்ட ரூ.26 லட்சம் வழங்கிய புரோபல் நிறுவனம்

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளிக்கு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் ரூ.26 லட்சம் நிதியை முதலமைச்சரிடம் புரோபல் நிறுவனம் வழங்கியது.

கோவையில் அமைந்துள்ள புரோபல் நிறுவனம் கிராமப்புற மக்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே மசக்காளிபாளையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான நிதி தேவைப்பட்டது. இந்த வகுப்பறைகள் கட்டுவதற்கு சுமார் ரூ.54 லட்சம் தேவை என்ற நிலையில், இதன் பாதி நிதியை வழங்க புரோபல் நிறுவனம் முன் வந்தது.

அதன்படி, கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச் சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், புரோ பல் நிறுவன நிர்வாகம் இயக்குநர் செந்தில்குமார் நமக்கு நாமே திட்டம் மற்றும் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சத்துக்கான காசோ லையை வழங்கினார்.

இந்த நிதி மூலம் பகுதி நிதியை அரசும், பகுதி நிதியை புரோபல் நிறுவனமும்
இணைந்து மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் நீண்ட காலமாக கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மாணவர்களின் பெற்றோர் விடுத்து வந்த சூழலில், புரோபல் நிறுவனத்தின் இந்த பங்களிப்பு பெருமளவு நன்மை புரிந்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி தெரிவித் துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img