fbpx
Homeபிற செய்திகள்பாலக்கோட்டில் ரூ.7500 மதிப்பு கலப்பட டீ தூள் பறிமுதல்

பாலக்கோட்டில் ரூ.7500 மதிப்பு கலப்பட டீ தூள் பறிமுதல்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலராக பொறுப்பேற்றுள்ள நந்தகோபால் பாலக் கோடு நகரத்தின் முக்கிய பகுதிகளான எம்.ஜி, ரோடு, கடைவீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகு திகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது எம்.ஜி. ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சாக்கு பையில் வைத்து கொண்டு டீ கடைகளுக்கு டீ தூள் பாக்கெட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

சந்தேகமடைந்த உணவு பாதுகாப்பு அலுவலர் டீ தூள் பொட்டலங்கள் 3 விதமான பிராண்டு பாக்கெட்டுகளில் எந்தவிதமான முறையான தயாரிப்பு முகவரி, காலா வதி தேதி உள்ளிட்டவை உணவு பாதுகாப்பு உரிம எண் இல்லாதால் அதனை கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி பாக்கெட்டி லிருந்த டீ தூளை போட்ட போது கலர் பிரிந்து கலப்படம் செய்யப்பட்டு போலியாக விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவரிடமிருந்த 30 கிலோ அள விலான சுமார் 7500/- ரூபாய் டீ தூள் பாக் கெட்டுகளை பறிமுதல் செய்தார்.

மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால் கூறும்போது, கலப்பட டீ தூள் அருந் தும் போது வயிற்று கோளாறு, கேன்சர் உள் ளிட்ட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படும் என தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப் பட்ட பொருட்கள் குறித்து மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதாவுக்கு தக வல் தெரிவித்ததன் அடிப்படையில் உணவு மாதிரி எடுத்து பகுப் பாய்விற்கு மாதிரி அனுப்ப உத்தரவிட்டார் .

பகுப்பாய்வு ஆய்வறிக்கை அடிப்படையில் விற்பனை செய்த நபர் மற்றும் தயா ரிப்பாளர் மீது கடும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img