fbpx
Homeபிற செய்திகள்பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துடைப்பம் தயாரிப்பு பயிற்சி

பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துடைப்பம் தயாரிப்பு பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் பின்தங்கிய வட்டாரமாக உள்ள தாளவாடியில், தொலைதூரத்தில் அமைந்துள்ள ’ராமரணை’ பழங்குடியினர் வாழும் குக்கிராமம் ஆகும்.

அங்கு சுமார் 22 குடும்பங்களைச் சார்ந்த 67 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் வாழ்வாதாரத்திற்காக வனத்தில் கிடைக்கும் சிறு வனப் பொருட்கள் மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

முதல்வர் பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். முதல்வர் பொதுமக்களுக்காக வழங்கப்படும் நலத்திட்டங்களை எவ்வித கால தாமதமின்றி வழங்கிட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள வளங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மகளிர் திட்ட இணை இயக்குநருக்கு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள், துடைப்பம் தயார் செய்ய பயன்படுத்தப்படும், வனத்தில் விளையும் ஒரு வகை நறுமணப் புல்லை பறித்து, சூரிய ஒளியில் நன்கு உலர்த்தி ஒரு கிலோ தலா ரூ.20 வீதம் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதையும், இடைத்தர கர்கள் அதனை சத்தி, பவானிசாகர் ஆகிய பகுதிகளில் ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டது.

ராமரணை மகளிர் சுய உதவிக் குழுவின் 17 உறுப்பினர்களுக்கு, ஈரோட்டில் இருந்து நன்கு துடைப்பம் தயாரிக்கும் நபர்களைக் கொண்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு துடைப்பம் தயாரிக்க உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அப்ப யிற்சிகளின் மூலம் ராமரணை பழங்குடியினர் மூன்று வகையான துடைப்பங்களை நாளொன்றுக்கு 15 முதல் 20 வரை தயார் செய்து ரூ.750 முதல் ரூ.1000 வரையிலும் விற்பனை செய்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

இத்தொழிலுக்காக மகளிர் திட்டத்தின் மூலம் ரூ.75,000 நிதியுதவியும், இம்மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ராமரணை பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு தயாரிக்கும் துடைப்பத்தை மகளிர் திட்டத்தின் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்தின் மூலம் சந்தைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் இவர்களது வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு இத்திட்டம் பயனுள் ளதாக இருப்பதாக இம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தினை தாளவாடி வட்டாரத்தில் உள்ள ஆசனூர், கேர்மாளம், திங்களூர் ஆகிய 3 ஊராட்சிகளைச் சேர்ந்த 8 பழங் குடியினர் வாழும் பகுதியை மேம்படுத்திடும் வண்ணம் மகளிர் திட்ட அலுவலகம் மூலம் விரிவுப்படுத்திட மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தர விட்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img