கோவையின் முதல் பள்ளி எனும் பெருமை பெற்ற சி.எஸ்.ஐ. மேல் நிலைப்பள்ளியின் 190 வது ஆண்டு நிறைவு விழாவில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டார்.
கோவை வெரைட்டி ஹால் சாலையில், கடந்த 1831 ஆம் ஆண்டு லண்டன் மிஷன் சொசைட்டியால் ஆரம்பிக்கப்பட்ட, தற்போதைய சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கோவை நகரில் துவங்கப்பட்ட முதல் பள்ளி எனும் பெருமையை பெறுகிறது.
190 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில், பயின்ற மாண வர்கள் நாட்டின் பல முக்கிய பொறுப்புகளில் பல தலைவர்களை பெற்ற பெருமையையும் கொண்டுள்ளது.
இந்நிலையில் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியின் 190 வது ஆண்டு நிறைவு விழா பள்ளி வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் பிரின்ஸ் கால்வின் தலை மையில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் தலைமையாசிரியை மெர்சி மெட்டில்டா அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர் களாக கோவை திரு மண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகி யோர் கலந்து கொண்டு 190 வது ஆண்டு நினைவு கல்லை திறந்து வைத்தனர்.
விழாவில் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பேசியதாவது, ஏழை எளிய மாணவர்களுக்கு எந்த பிரதிபலனும் எதிர் பார்க்காமல் கிறிஸ்தவ மிஷனரிகள் கல்வி அறிவை புகட்டி வருகிறது.
கல்வி வியாபாரமாகி விட்ட இந்த சூழ்நிலையில் அதனை சேவையாக கருதி சிஎஸ்ஐ போன்ற கிறிஸ்தவ அமைப்புகள் மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவித்து வருகிறது. நாட்டில் கல்வி கூடங்கள் உருவாக்கி மாணவர்களுக்கு அறிவை புகட்டுவதில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்கு மகத்தானது.
கிறிஸ்தவ மிஷனரிகள் இல்லையென்றால் இந்த அளவு கல்வி அறிவு வளர்ந்து இருக்காது. மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் கற்க வேண்டும். சாதிக்கு பிறந்தவர்கள் அல்ல, சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை மனதில் இறுத்தி வாழ்க்கையில் உயர வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பேராயர் துணைவியார் ஆனி ஹேமலதா, தாளாளர் பிரின்ஸ் கால்வின், கோவை திருமண்டல நிர்வாக செயலர் டேவிட் பர்ணபாஸ், கல்வி ஒருங்கிணைப்பாளர் அமிர்தம், நிதி நிர்வாகி ஆர்தர் சதானந்தம், முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் வள்ளியம்மாள், உதவி தலைமையாசிரியர் டேவிட் பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்- ஆசிரியைகள், ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



