சி.சி.2343 நஞ்சுண்டா புரம் தொடக்க வேளாண் மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வித் திட்டம், விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு கடன் மேளா நடைபெற்றது.
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் தலைமை தாங்கி பேசுகையில், இச் சங்கத்தில் போதியளவு வைப்புத் தொகை உள் ளது. எனவே, விவசா யிகள் தங்களுக்குத் தேவையான கடன்களை தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பச் செலுத்தும் பட்சத்தில் அதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மேலும் கடன்கள் வழங்க வேண்டும்.
அதன்மூலம் உறுப் பினர்கள் பயனடைய வேண்டும்.சங்கத்தின் வைப்பு நிதிகளை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றார். நஞ்சுண்டாபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் தலைவர் பொ.சண்முகம் வரவேற்றார்.
சரக துணைப்பதிவாளர் பெ.கிருஷ்ணன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் கே.ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இக்கடன் மேளாவில் இருவருக்கு கே.சி.சி.பயிர்க் கடன் ரூ.3.20 லட்சம், 3 பேருக்கு டாப்செட்கோ கடன் ரூ.1.50 லட்சம், 11 பேருக்கு கறவை மாட்டுக் கடன் ரூ.5.50 லட்சம், 4 பேருக்கு உடல் ஊன முற்றோர் கடன் ரூ.2 லட்சம், 4 பேருக்கு வீட்டு அடமானக் கடன் ரூ.3 லட்சம், 47 பேருக்கு மகளிர் சிறு வணிகக் கடன் ரூ.11.75 லட்சம், ஒரு மகளிர் சுய உதவிக் குழு வுக்கு ரூ.3 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேற்பார்வையாளர் ஹரிஹரன், பெரியநாயக்கன் பாளையம் வட்டார கூட்டுறவு சார்பதிவாளர் \ கள அலுவலர் வாணி, நஞ்சுண்டாபுரம் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேஸ்வரி, சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்கத்தின் செயலர் பி.வசந்தி நன்றி கூறினார்.
முகாமில் கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய சட்டப்பூர்வ நிதிகளுக்கான காசோலை ரூ.4,28,189-யை வழங்கினர்.
முகாம் ஏற்பாடுகளை மாவட்ட கூட்டுறவு ஒன் றியத்தின் மேலாண்மை இயக்குநர் முத்துக்குமார் செய்திருந்தார்.



