ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல்வாரம் ‘தேசிய ஊட்டச்சத்து வாரமாக’ கொண்டாடப்பட்டு வருகின்றது. அதாவது செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகின்றது.
இதன்படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அங்கன் வாடி ஊழியர்கள் உருவாக்கிய ஊட்டச்சத்து உணவு வகைகளை கலெக்டர் சமீரன் பார்வையிட்டார்.
இது குறித்து அரசு துறை அதிகாரிகள் கூறுகையில் வறுமையின் காரணமாக போதிய ஊட்டமின்மையும், அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் தொற்று வியாதிகளும் ஏற்படுகின்றன.
இதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய குறைபாட் டால் அவர்கள் வேலை செய்யும் ஆற்றலும், உற்பத்தித்திறனும் குறைந்து ஏழ்மை தொடர்கிறது. இந்த சுழற்சி இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதை தவிர்க்க ஒரு வாரம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
இதை ஒட்டி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ஊட்டச் சத்து உணவுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.



