கோவை மாநகராட்சி 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணி, மின்கம்பம் புகார்கள் உள்ளிட்டவை மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தூய்மைப் பணியா ளர்களிடம், செல்லும் இடங்களில் மக்கள் கோபப் பட்டாலும் அன்பாக பேசி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பெறப்படும் தூய்மைப் பணி மற்றும் மின் கம்பம் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 22வது வார்டு பகுதியை சுத்தமான மற்றும் பசுமை நிறைந்த கிளீன் அண்ட் கிரீன் வார்டாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.
குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் யாரேனும் புகார் தெரி விக்க போனில் அழை த்தால், தனது இடத்து க்கு அவர்களை வரச் சொல்லாமல் அவர்கள் இருக்கும் இடத்தை தேடி சென்று அவர்களுடன் கலந்துரையாடி பிரச்சினை களுக்கு தீர்வு காண நடவடி க்கை மேற்கொண்டு வருகி றார்.
தினமும் களத்திற்கு சென்று மக்களோடு மக்களாக பணியாற்றி வருவது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



