தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மாதவன்குறிச்சி ஊராட்சி கூடல்நகர் பகுதி இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் நில எடுப்புக்கு உட்படுவதால் அப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு மாற்று குடியிருப்பு இடம் தேர்வு செய்வது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
அருகில் வருவாய் அலுவலர் (இஸ்ரோ) செல்வராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) செல்வநாயகம், உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், துணை ஆட்சியர் ஜெயா, வட்டாட்சியர் (இஸ்ரோ) நாகசுப்பிரமணியன், திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



