சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தி கேம்ஃபோர்ட் இன்டர்நேசனல் பள்ளி மாணவர்கள் 22 பேர் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி உள்ளனர்.சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஆக.3) வெளியானது.
இதில் தி கேம்ஃபோர்ட் இன் டர்நேசனல் பள்ளி மாணவி ஏ.ஆர்யா 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
அபிமன்யு ஜெயகணேஷ் 489 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், கே. நந்திதா 484 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 66 பேர் தேர்வெழுதினர். இதில் 22 பேர் 90 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 30 பேர் 80 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 11 பேர் 70 சதவீதத்துக்கும் அதிகமாகவும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளது.
மாணவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த மதிப்பெண்கள் இவை.
இந்த வெற்றி அவர்களின் நாளைய அற்புதமான சாதனைகளுக்கு அடித்தளமிடும். அனைவருக்கும் வாழ்த்துகள் என பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர்.



