திருப்பூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் மற்றும் திருப்பூர் தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக விக்ரம் திரைப்படத்தின் 25வது நாள் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் திருப்பூர் ஸ்ரீநிவாசா திரையரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை வகித்தார். மாநில விவசாய அணி செயலாளர் டாக்டர் மயில்சாமி முன்னிலை வகித்தார்.
ஸ்ரீநிவாசா திரையரங்க உரிமையாளர் பவி, நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர்
புகழேந்தி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொருளாளர் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் செ.மகேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நம்மவர் தொழிற்சங்க பேரவை துணை தலைவர் மெல்கியோ சுதன் மற்றும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மறைந்த மக்கள் நீதி மய்யம் நகரச் செயலாளர் திரு. ரவி அவர்களுடைய குடும்பத்தாருக்கு குடும்ப நல நிதியாக ரூ 15,000/- வழங்கப்பட்டது. மேலும் ஸ்ரீனிவாசா மல்டிபிளக்ஸ் திரையரங்க ஊழியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பாக திரையரங்குக்கு நினைவுப் பரிசும் நற்பணி இயக்க தோழர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கு சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.



