முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நிதித்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் அரசின் வரவுகளை மின்செலுத்துச்சீட்டு மூலம் பெறும் நடைமுறையில் இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளை திரட்டல் வங்கிகளாக ஒருங்கிணைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
இந்த நிகழச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், கருவூலக் கணக்குத்துறை ஆணையர் வெங்கடேஷ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் ஸ்ரீமதி, இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் இம்ரான் அமீன் சித்திக் மற்றும் வங்கியின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



