தர்மபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 54-வது தேசிய நூலக வார விழா மாவட்ட மைய நூலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தி தலைமை தாங்கினார்.
முதல் நிலை நூலகர் மாதேஸ்வரன் வரவேற்று பேசினார். வாசகர் வட்ட தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து மாவட்டத்தில் உள்ள கிளை நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், பள்ளி- கல்லூரி மாணவர்கள் நூலகங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இல்லங்கள் தோறும் நூலகங்கள் உருவாக வேண்டும். அனைவரிடமும் வாசிப்பை நேசிக்கும் பண்பு வளரவேண்டும் என்று கூறினார்.
விழாவில் கண்காணிப்பாளர் மணி, நூலக ஆய்வாளர் சந்திரசேகரன், தலைமையாசிரியர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இரண்டாம் நிலை நூலகர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.



