fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு வங்கித் துறைக்கு மெர்கன்டைல் வங்கி ஒரு முன்னுதாரணம்: நூற்றாண்டு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா...

தமிழ்நாடு வங்கித் துறைக்கு மெர்கன்டைல் வங்கி ஒரு முன்னுதாரணம்: நூற்றாண்டு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம்

தமிழ்நாடு வங்கித் துறைக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank (TMB). டிஜிட்டல் மயமாக்கப்பட்டு சரியான பாதையில் நகர்ந்துள்ளது. வங்கியின் தொழில்நுட்பம் மிக உயரத்தை எட்டியுள்ளது என்று அந்த வங்கியின் நூற்றாண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை தூத்துக்குடியில் தொடங்கியது.

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விழாவை தொடங்கி வைத்தார். இந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தனித்துவமிக்க டிஎம்பி தபால் தலை மற்றும் பிரத்யேக அஞ்சல் அட்டையை தலைமை விருந்தினரான மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பரிவர்த்தனைகளான பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், வங்கி கணக்கு புத்தகங்களை அச்சிடுதல் உள்ளிட்ட சேவைகளை அவர்களுடைய வசிப்பிடங்களிலேயே நேரடியாக பெற உதவும் வகையில் ‘டிம்பி மொபைல் (TMB Mobile DigiLobby) வாகனத்தையும் மத்திய நிதி அமைச்சர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதன் பின்னர், கோவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் நட வடிக்கையாக, பொது மக்கள் தடுப் பூசியின் முக்கியத்துவம் குறித்த விழிப் புணர்வை உருவாக்கும் வகையில் டிஎம்பி மற்றும் டைம்ஸ் நெட்வொர்க் இணைந்து மேற்கொள்ளும் நடமாடும் தடுப்பூசி முகாம் (Mobile Vaccination Camp)வாகனத்தையும் மத்திய நிதி அமைச்சர் தொடங்கி வைத்தார்.

விழாவில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை நிறுவனங்களுக்கு கடனுதவிகளை மத்திய நிதி அமைச்சர் வழங்கினார். சாதாரண சாதனை அல்ல
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
வெற்றிகரமாக 100 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கும், அவ்வங்கியைச் சார்ந்த அனைவருக் கும் எனது வாழ்த்துகள். இது ஒரு சாதாரண சாதனை அல்ல.

பல ஆண்டுகள் செயல்பட்ட நிறுவனங் களும், அமைப்புகளும் கூட தங்க ளுடைய வெற்றிப் பாதையை இழந்திருக்கின்றன. ஆனால் மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பழமையான பாரம்பரியமிக்க வங்கித்துறையில் 100 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு எனது பாராட்டுகள்.

டிஎம்பி தமிழ்நாடு வங்கித் துறைக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. அரசின் தொடர்ச்சியான உடனடி நடவடிக்கைகளுக்குப் பிறகு இன்று இந்தத் துறை நிலையாக உள்ளது. பொதுத்துறையில் உள்ள பல வங்கிகள் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

அதே நேரத்தில், டிஎம்பி இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், சிறப்பாக செயல்பட்டு நன்றாக நிர்வகித்து, துறை சார்ந்த பிரச்சினைகளில் பயணம் செய்தது.

வங்கி டிஜிட்டல் மயமாக்கப்பட்டு சரியான பாதையில் நகர்ந்துள்ளது. வங்கி தொழில்நுட்பம் மிக உயரத்தை எட்டியுள்ளது, கிராமப்புறங்களில் கிளைகளைத் திறக்காமல் டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் நீங்கள் வங்கிச் சேவைகளை வழங்க முடியும்.

ஜீரோ பேலன்ஸ் கணக்கு
பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து தரப்பு மக்களும் வங்கிச் சேவையைப் பயன்படுத்த வேண்டு மென்றால் அது ஜீரோ பேலன்ஸ் கணக்காக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிந்திருந்தார்.

இன்று, இந்தியாவின் அனைத்து குடிமக்களும் வங்கிச் சேவையை பயன்படுத்துவதை ஜந்தன் யோஜனா, சாத்தியமாகியுள்ளது. இதன்மூலம் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு மற்றும் ரூபே கார்டுடன் கூடிய காப்பீடும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அனைத்து குடிமக்களும் பேங்கிங் செயல்முறைகள் மற்றும் அனைவருக்குமான நிதி சேவைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஏழைகளுக்கும், அனைத்து தரப்பினருக்குமான நிதிச்சேவைகளை வழங்குவதற்கு பிரதமர் மந்திரி ஜன்தன் யோஜனா தொடங்கப்படாவிட்டால் அது சாத்தியமாகி இருக்காது. இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி யின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான கே.வி. ராமமூர்த்தி பேசுகையில், “டிஎம்பி கடந்த 99 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து பங்குதாரர்களுக்கும் எப் போதும் உரிய மதிப்பை அளித்து வந்துள்ளது.

வரலாற்றில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளான தேச விடுதலை, எமர்ஜென்சி, பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் அண்மையில் உருவ-£ன பெருந்தொற்றான கோவிட் 19 உள்ளிட்ட பல்வேறு சோதனையான கால கட்டங்களை, வங்கி வெற்றி கரமாக சந்தித்து கடந்து வந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் கோவிட் 19 பெருந்தொற்றை சமாளிக்கும் வகையில், அவர்களுக்கு உதவும் விதமாக இன்றைய தேதிவரை 13,753 பேருக்கு ரூ.1,567.62 கோடி நிதியை வழங்கியுள்ளது.

டிஜிட்டல் பேங்கிங் யுகத்தில், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்கும் நோக்கத்துடன் பணப் பெட்டகம் மற்றும் கரன்சி நோட்டுகளை கையாளுதல், அடுக்கி கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் தனியார் வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியாகும்.

நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களையொட்டி சிறப்பு டிஎம்பி தபால் தலை மற்றும் சிறப்பு அஞ்சலட்டை வெளியீட்டு நிகழ்வுடன் பல்வேறு முன்னெடுப்புகளை தொடங் கியுள்ளோம். டிம்பி மொபைல் டிஜிலாபி-யை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

பொது மக்களுக்கு உதவும் வகையில், ‘நடமாடும் தடுப்பூசி முகாம்’ வாகனத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதியுதவிகளை வழங்குவது எங்களது ஒரு வருட தொடர் முயற்சிகளில் முதன்மையானதாக இருக்கும்”என்றார்.

டிஎம்பி வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் ஜென ரல் ஜி.நட ராஜன், அரசுத்துறை அதிகாரி கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட மற்றும் ஒன்றொடொன்று இணைக் கப்பட்ட 509 கிளைகளை, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கொண்டுள்ளது,

படிக்க வேண்டும்

spot_img