மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அளித்து உதவ வேண்டும் என இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் சம உரிமை வழங்கும் சட்டம் RPWD ACT 2016 பிரிவு 35-ன் படி, அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அதிகளவு மாற்றுத் திறனாளிகளை, பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு, பணியாளர்களுக்கு வழங்கப்படும் வருங்கால சேமிப்பு நல நிதி (EPF) மற்றும் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் தொகை(ESI) ஆகியவற்றிற்கான நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையினை மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரம் வழங்கும் துறையே Department of Empowerment of Persons with disabilities) செலுத்திடும்.
பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணிக் கொடையில் (Gratuity) நிறுவனங்கள் செலுத்தும் தொகையில் 3-ல் 1 பங்கு தொகையினை மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரம் வழங்கும் துறையே (Department of Empowerment of Persons with disabilities) செலுத்திவிடும்.
தனியார் நிறுவனமானது மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தொழிற்பயிற்சி அளித்து பணியில் சேர்த்துக் கொண்டால், அப்பயிற்சி காலத்திற்கான உதவித்தொகையினை மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரம் வழங்கும் துறையே (Department of Empowerment of Persons with disabilities) செலுத்தி விடும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தகுதியான பணிகள் குறித்து அறிந்து கொள்ள நிறுவனங்கள்:
லீttஜீs://யீஷீக்ஷீனீs.ரீறீமீ/க்ஷீஷ்க்ஷிபீ2யீநிஸ்8ஙீகிஷ்திணீநீ7-
தொழிற்சாலைகள்:
லீttஜீs://யீஷீக்ஷீனீs.ரீறீமீ/க்ஷீஷ்க்ஷிபீ2யீநிக்ஷி8ஙீகிஷ்திsணீநீ7-
ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்படும் வசதிகள் குறித்து அறிந்து கொள்ள: லீttஜீs://தீவீtறீஹ்/றிகீஞி_றிக்ஷீவீஸ்ணீtமீஷிமீநீtஷீக்ஷீ
அதன்படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மேற்கண்ட மத்திய அரசின் ஊக்கத் தொகை மற்றும் சலுகைகளை பெற்று பயனடையலாம்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அதிக ளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் வேலைவாய்ப்பினை வழங்கி தகுதியான மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவ வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் தெரிவித்துள்ளார்.



