செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட்டில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாந கராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு உலக செஸ் கொண்டாட்டம் கோவையில் முன்னோட்டம் என்ற தலைப்பில் புகைப்படம் எடுக்கும் பாயிண்ட்/ செல்பி பாயிண்ட் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது.
இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த புகைப்பட பாயிண்ட் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி முடியும் வரை இருக்கும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.



