ராமநாதபுரம் மாவட் டம் நெடுஞ்சாலைகள் மற் றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை செய்தி யாளர்கள் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
ராமநாதபுரம் மாவட் டம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழுதூர் பெரியபட்டிணம் சாலையில் ரூபாய் 70.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் சிறிய பாலம் அமைக்கும் பணியினையும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் வைகை தரைப்பாதை சாலையில் ரூபாய் 74 லட்சம் மதிப் பீட்டில் சுமார் 1.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேற் கொள்ளப் பட்டுவரும் தார்சாலை புதுப்பிக்கும் பணியினையும்,
கோப்பே ரிமடம் முதல் ஆத்தங்கரை சாலை வரை ரூபாய் 344 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 8 கிலோமீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் தார்சாலை புதுப்பிக்கும் பணியினையும், உத்திரகோசமங்கை கிராம சாலையில் ரூபாய் 190 லட்சம் மதிப்பீட்டில் உத்திர கோசமங்கை கோவிலை சுற்றி வடிகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், உத்திரகோசமங்கை முதல் திருப்புல்லாணி சாலை வரை ரூபாய் 590 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 4.28 கிலோமீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை அகலப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல் பணியினையும், ராம நாதபுரம் நாகப்பட்டினம் சாலையில் ஆர்.எஸ் மடை சந்திப்பில் ரூபாய் 400 லட்சம் மதிப்பீட் டில் சாலையில் உள்ள கரும் புள்ளிகளை நிரந்தரமாக சரி செய்யும் பணியினையும் செய்தியாளர்கள் பயணத் தின் போது மாவட்ட ஆட் சித்தலைவர் சங்கர் லால் குமாவத் பார்வையிட்டார்.
இச்செய்தியாளர்கள் பயணத்தின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சந்திரன்,உதவி கோட்டப் பொறியாளர் பிரேம் ஆனந்த், உதவி பொறியாளர் ராஜ்குமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந் துகொண்டனர்.



