fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் தைராய்டு கண் நோய் அதிகரிப்பு டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை தகவல்

சென்னையில் தைராய்டு கண் நோய் அதிகரிப்பு டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை தகவல்

“பார்வைத்திறனை அச்சுறுத்தும் பிரச்சினைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோயான தைராய்டு கண் நோய் (TED) பாதிப்பு எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு சென்னை மாநகரில் ஏறக்குறைய 25 சதவீதம் அதிகரித்திருக்கிறது,” என்கிறார் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், மருத்துவ சேவைகள் துறையின் தலைவருமான டாக்டர் அஸ்வின் அகர்வால். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தைராய்டு சுரப்பியின் மிகை செயலாக்கம் (கிரேவ்ஸ் நோய்) அல்லது தைராய்டு சுரப்பியின் குறைவான செயலாக்கம் என்ற பாதிப்புள்ள நோயாளிகளிடம் தைராய்டு கண் நோய் ஏற்படுவது காணப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை யின் காரணமாக இது பொதுவாக ஏற்படுகிறது. தைராய்டு நோயுள்ள நோயாளிகளில் 10% நபர்களுக்கு உடலில் இயல்பான தைராய்டு அளவுகள் இருக்கின்றன என்றார்.

கண் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மற்றும் அழகியல் சேவைகள் துறையின் தலைவர் டாக்டர் பிரித்தி உதய் பேசுகையில், “பெருந்தொற்று காலத்தின் போது தைராய்டு கண் நோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித் ததை நாங்கள் கவனித்திருக்கிறோம். கோவிட் – 19 வைரஸ் தைராய்டு சுரப்பியை ஊடுருவவும் மற்றும் நோயெதிர்ப்பு இயக்க முறைகளை தூண்டிவிடவும் திறன்கொண்டது என்பது இதற்கு காரணமாக இருக்கக்கூடும். வைரஸுக்கான எதிர்ப்பு மருந்துகள் தைராய்டு சுரப்பியை பாதிப்பதற்கான சாத்தியமும் இருக்கிறது.

மருத்துவ பரிசோதனையகங்களும், மருத்துவமனைகளும் பெருந்தொற்று காலத்தின்போது அணுகமுடியாதவாறு இருந்ததும் மற்றும் கோவிட் – 19 தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக மருத்துவமனைக்கு செல்வதை நோயாளிகள் தவிர்த்ததனாலும் தைராய்டு அளவுகளை உரிய காலஅளவுகளில் பரிசோதிக்க தவறியது இதற்கு ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம்.

இதன் காரணமாக, கட்டுப்பாடற்ற தைராய்டு அளவுகள் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை இக்காலகட்டத்தில் அதிகரித்திருக்கிறது,” என்றார். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் எஸ். சௌந்தரி, “தைராய்டு ஹார்மோன் அளவுகளை கட்டுக்குள் வைத்திருப்பதும் மற்றும் கண் அறுவைசிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவமுள்ள மருத்துவரிடம் குறித்த காலஅளவுகளில் கண் பரிசோதனை செய்துகொள்வதும், தீவிரமான நோய் வராமல் முன்தடுப்பதற்கு ஒரே வழிமுறையாகும்,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img