fbpx
Homeபிற செய்திகள்சாதனை புரிந்த முன்னாள் மாணவருக்கு பாராட்டு விழா

சாதனை புரிந்த முன்னாள் மாணவருக்கு பாராட்டு விழா

கோவை, துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனையாளருமான விஷ்ணுராமுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.

கல்லூரியின் இயந்திரவியல் துறைத் தலைவர் வி.சுரேஷ்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என்.உமா தலைமை வகித்து நினைவு பரிசினை வழங்கி பேசும் போது, மாணவர்கள் தங்களின் கல்வியிலும், சமூக வாழ்விலும் சாதனை நிகழ்த்துவதற்கு குறிக்கோளுடன் தொடர்ந்து செயல்படும் போது சாதனை சாத்தியப்படும் என்று குறிப்பிட்டார்.

கல்லூரி துணை முதல்வர் டி.கோபால கிருஷ்ணன் சாதனையாளருக்கு பொன் னாடை அணிவித்தார். முன்னாள் மாணவர் ஜி.டி.விஷ்ணுராம் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இரண்டு சாதனை களை நிகழ்த்தியதை பற்றி கூறினார்.

இவர் தனது சாதனையில் 2152 கிலோ மீட்டர் தூரத்தை கார் மூலம் 20.52 மணி நேரத்திலும், 623 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் மூலமாக 23.53 மணி நேரத்திலும் கடந்து சாதனை புரிந்துள்ளார்..

சாதனை நிகழ்த்திய இம்முன்னாள் மாணவரை கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

முன் னாள் மாணவர் பேரவை அமைப்பின் தலைவர் வி.சுரேந்திரன் நன்றி கூறினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் பேரவை அமைப்பின் செயலர் டி.சந்தோஷ்குமார் மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img