கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வாலாங்குளத்தில் தமிழக சுற்றுலா மேம்பாட்டுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள படகுக்குழாம் பணிகளையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, படகுக்குழாம் பணிகளையும், ஸ்மார்ட் சிட்டி பணிகளையும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
உடன் பொது மேலாளர் (ஸ்மார்ட் சிட்டி) பாஸ்கரன், ஹோட்டல் தமிழ்நாடு மேலாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், கணேசன், உதவி சுற்றுலா அலுவலர் சதிஷ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.



