fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கல்- ஆட்சியர் தகவல்

கோவை மாவட்ட விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கல்- ஆட்சியர் தகவல்

கோவை மாவட்ட விவசாயி களுக்கு வட்டியில்லாக் கடனுதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட் சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங் களிலும் விவசாயிகளுக்கு வட்டி யில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடன், மாற் றுத் திறனாளிகள் கடன், குறைந்த வட்டியில் சுய உதவிக்குழுக் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான கடன் உள்ளிட்ட கடனுதவிகள் வழங்கப்பட்டு வரு கின்றன.

மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், நிலவுடைமை தொடர்பான கணினிச் சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயன டையலாம்.

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பின ராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.100/- பங்குத்தொகை மற்றும் ரூ.10/- நுழைவு கட்டணம் செலுத்தி கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினராக சேர்ந்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினரல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சில்லறை விற் பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால், கோவை மண்டல இணைப்பதிவாளரை 73387 20301, கோவை சரக துணைப்பதிவாளரை 73387 20303, பொள்ளாச்சி சரக துணைப் பதிவாளரை 73387 20304 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img