கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமில் அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடை செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது.
அப்போது ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் சமீரன் கால்களில் விழுந்து கோரிக்கை விடுத்தார். அவரை காலில் விழாமல் தடுத்து மாவட்ட ஆட்சியர் குறைகேட்டார்.



