fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி திமுக 9வது வார்டு உறுப்பினர் பி. சரஸ்வதி பெரியசாமி சொந்த செலவில் நலத்திட்ட...

கோவை மாநகராட்சி திமுக 9வது வார்டு உறுப்பினர் பி. சரஸ்வதி பெரியசாமி சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

கோவை மாநகராட்சி 9வது வார்டு கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் மாமன்ற உறுப்பினர் பி. சரஸ்வதி பெரியசாமி தனது சொந்த நிதி 2 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் திறப்பு மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தள்ளுவண்டி வழங்குதல் விழா மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவருக்கு கல்வி கட்டணத்திற்கு ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் ( எ) கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன்குமார் மற்றும் பெரியசாமி( எ) எஸ்.எம்.எஸ். மணி, வார்டு செயலாளர் மயில்சாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img