fbpx
Homeபிற செய்திகள்கோவை, நீலகிரியில் கனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை

கோவை, நீலகிரியில் கனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை

வெப்பச்சலனம் காரண மாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரோடு, தேனி மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

நாளை செங்கல் பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக் கூடும் எனவும் கூறியுள்ளது.

தமிழ்நாடு, புதுவையில் அநேக இடங்களில் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 30-ம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

29ம் தேதி கோவை, திருப்பூர், தென்காசி மாவட்டங்களிலும் 30ம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img