கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கணபதி, மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகிலுள்ள கணேஷ் லே-அவுட் முதல் வீதியில் தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம்பிரித்து வழங்கப்பட்டுவருவதை பாராட்டி தொடர்ந்து இப்பணிகளை செய்ய அறிவுரை வழங்கியபோது எடுத்தபடம்.
உடன் வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், மாமன்ற உறுப்பினர்கள் ரங்கநாயகி, சரண்யா, உதவி பொறியாளர்கள் நாசர், மகேஷ், மரகதம், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



