fbpx
Homeபிற செய்திகள்கோவை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்-பரபரப்பு

கோவை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்-பரபரப்பு

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று கணவன், மனைவி 2 பேர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்களை போலீசார் சோதனை செய்வதை பார்த்ததும் ஜெசி என்ற பெண் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்ற முயற்சி செய்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மண் எண்ணையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணை யில் அவர்கள் குனிய முத்தூரை அடுத்த பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த பீட்டர் மற்றும் அவரது மனைவி ஜெசி என்பது தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் கூறும்போது. அவர்களது இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து ரேஸ் கோர்ஸ் போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img