கோவையை அடுத்த விளாங்குறிச்சியில் உள்ள ஒரு பேக்கரி அருகே கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓட முற்பட்டனர். உடனே போலீசார் விரைந்து செயல்பட்டு அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து அவர்களை கோவில்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித் தனர். இதில் அவர்கள். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ஆனந்த் (வயது30), தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகன் மாரிசெல்வம் (30) என்பது தெரியவந்தது.
கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களாக கோவில்பாளையம் டேங்க் வீதியில் ஆசிரியர் ஒருவரிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பில் ஈடுபட்டதும், குரும்பபாளையத்தில் ரூ.10 ஆயிரம் வழிப்பறி செய்ததும், வையாபுரி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் கொள்ளையடித்தும், கீரணத்தத்தில் 3 கிராம் நகையை திருடியதும், கோவில்பாளையத்தில் 2 எரிவாயு சிலிண்டர்களை திருடியதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து மொத்தம் 13 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம், 2 கியாஸ் சிலிண்டர், திருடபயன்படுத் திய 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



