fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு மருத்துவமனை இருதய நோயாளிகளில் 25 சதவீதம் பேர் இளைஞர்கள்

கோவை அரசு மருத்துவமனை இருதய நோயாளிகளில் 25 சதவீதம் பேர் இளைஞர்கள்

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சம் பேர் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். மற்ற நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இங்கு 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் 50 சதவீதம் பேர் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். மாரடைப்பு பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு செயல் படுத்திவரும் திட்டம் குறித்து கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறை டாக்டர் ஜெ.நம்பிராஜன் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளுக்கு மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சையளிக்க ’ஸ்டெமி’ திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 5 மாவட்டங்களுக்கு மண்டல மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதன்கீழ், முதன்மை சிகிச்சை மையங்களாக குன்னூர், தாராபுரம், கோபிசெட்டிபாளையம், காங்கயம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், உடுமலைப்பேட்டை, ஈரோடு, பல்லடம், கோத்தகிரி, கூடலுார், மடத்துக்குளம், சூலூர், அன்னூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளும், கிளை மையங்களாக கோவை இஎஸ்ஐ மற்றும் நீலகிரி, கரூர், பெருந்துறை, திருப்பூர் ஆகியபகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் செயல்படுகின்றன.

இம்மருத்துவமனைகளை இணைத்து, வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. கிளை மருத்துவமனைக்கு மாரடைப்புடன், அபாய கட்டத்தில் வரும் நோயாளிகள் குறித்த தகவல்கள், உடனுக்குடன் இக்குழுவில் பதிவிடப்படும்.

குழுவில் உள்ள டாக்டர்கள், நோயாளிக்கு தேவையான சிகிச்சை குறித்து ஆலோசனைகளை வழங்குவர். தற்போது இளைஞர்களுக்கு அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 25 சதவீதம் பேர் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களாக உள்ள னர்.

அதுகுறித்து தனியே ஆரா ய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 40 வயதுக்கு கீழ் உள்ள 300 பேரின் விவரங்கள் சேகரிக் கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img