கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கொரோனா தொற்றுபரவாமல் இருப் பதற்கான அனைத்து வழிகாட்டும் நெறிமுறைகளுடனும், சமூக இடை வெளியுடனும், 18.12.2021 அன்று காலை 9 மணியளவில் ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்திட ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகா மில் உற்பத்திதுறை, ஜவுளித் துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டிதுறை ,ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட முன் னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 5000க் கும் மேற்பட்ட பணிக் காலியிடங் களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமிற்குவரும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்று களின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். இம்முகாமில்கலந்து கொள்ள வயதுவரம்பு இல்லை.
இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர் வர்களுக்கு பணி நியமன ஆணை அன்றைய தினமே வழங்கப்படும். இம்முகாமில் பணிநிய மனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுரத்து செய்யப்பட மாட்டாது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in http://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் விவரங்களை பதிவு செய்தல்வேண்டும்.
இம்முகாமில்கலந்து கொள்ள அனுமதி முற் றிலும் இலவசம். மேலும் விவரங்களுக்கு 94990 55938 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
எனவே, மனுதாரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



