மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
மாகாகவி பாரதி புகைப்படத்திற்கு பேராசிரியர் கள், மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். சுயநிதிப்பிரிவுத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.அரிச் சந்திரன் வரவேற்றார்.
கல்லூரியின் கொங்கு இசை மன்ற மாணவர்கள் பாரதியார் பாடல்களைப் பாடி புகழஞ்சலி செலுத்தினர்.
தலைமை தாங்கி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றுப் புகைப் படக் கண்காட்சியினைத் திறந்து வைத்து, கல்லூரி முதல்வர் முனைவர் மா.இலட்சுமணசாமி பேசினார்.
சிறப்பு விருந்தினராகப் பள்ளித் தலைமையாசிரியர் மா.சுகுணா, ‘மானுடம் பாடிய வானம்பாடி’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு களை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில், கல்லூரி மாணவர்களுக்கு, ‘நம்மை நாமே உணர்ந்துகொள்ள பாரதியாரின் பாடல்கள் துணை நிற்கும்’ என் பதனை பாரதியின் பாடல்கள் மற்றும் அவரது வாழ்க்கை வர லாற்றின் வாயிலாக நயம்பட எடுத்துரைத்தார்.
தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் முனை வர் ச.அபினாஷ் குமார் நன்றி கூறினார். பாதியாரின் புகழைப் போற்றும் வகையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்த்துறை மற்றும் பிற துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு புகைப்படக் கண்காட்சியைப் பார் வையிட்டனர்.



