fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் ராகுல்காந்தி ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கம் துவக்கம்

கிருஷ்ணகிரியில் ராகுல்காந்தி ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கம் துவக்கம்

கிருஷ்ணகிரியில் மாவட்ட ராகுல்காந்தி ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர் நலச்சங்கத்தை செல்லக்குமார் எம்பி., துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி பழையபேட்டையில், மாவட்ட ராகுல்காந்தி ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர் நலச் சங்க துவக்க விழா நடந்தது.

இந்த விழாவிற்கு காங்கிரஸ் எம்.பி., டாக்டர். செல்லக்குமார் தலைமை வகித்து, சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இனிப் புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் காசிலிங்கம், நகர தலைவர் லலித்ஆண்டனி, நகர்மன்ற உறுப்பினர் விநாயகம், நிர்வாகிகள் ஆறுமுகசுப்பிரமணியன், ரமேஷ் அர்னால்டு, ஆட்டோ சங்கத் தலைவர் மைக்கேல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img