fbpx
Homeபிற செய்திகள்கிரியா பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கான செயல்திட்டம் அறிமுகம்

கிரியா பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கான செயல்திட்டம் அறிமுகம்

“பிராரம்ப் 2022” இந்த கல்வியாண்டில் எம் பிஏ கல்வி திட்டத்தில் இணைந்து 2024-ம் ஆண் டில், படிப்பை நிறைவு செய்யவிருக்கும் புதிய மாணவர்களுக்கான அறி முக செயல்திட்டமும் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் கிரியா பல்கலையின் ஐஎஃப்எம் ஆர் ஜிஎஸ்பி ஆல் ஸ்ரீசிட்டி கல்வி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த ஆண்டு, 22 மாநிலங்களிலிருந்து எம்பிஏ கல்வி திட்டத்தில் இணைந்திருக்கும் 178 மாணவர்களை இப்பல் கலைக்கழகம் வரவேற்றது. பிராரம்ப் 2022 நிகழ்வு கடந்த 6-ம் தேதி முதல் 3 நாட்கள் நடந்தது.

கிரியா பல்கலைக்கழகத் தின் ஐஎஃப்எம்ஆர் ஜிஎஸ்பி-ன் டீன், பேரா சிரியர் லட்சுமி குமார் கூறியதாவது: கற்றுக் கொள்ளும் பாடத்திட்ட உள்ளடக்கம் மட்டுமின்றி, இங்கு உங்களது நேரம், தொடர்ச்சியான கற்றல் காலஅளவாக இருக்கும்.

இக்கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து வெளியேறுகிறபோது அறிவு, திறன்கள் மற்றும் சரியான மனப்பான்மை நிறைந்தவராக இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் தீவி ரமாக பாடுபடுவோம் என்றார்.

கிரண்ட்ஃபாஸ் பம்ப்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் -ன் முன்னாள் நிர்வாக இயக்குனரும், சுயாதீன இயக்குனரும் மற்றும் ஆலோசகருமான ரங்கநாத் என். கிருஷ்ணா, முதல் நாளன்று தலை மை விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

கார்ப்பரேட் சூழலில் வெற்றி காண்பதற்கு ஒட்டு மொத்த நிறுவனத்தின் முழுமையான, விரிவான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது அவசியம்.
உண்மையிலேயே சிறப்பாக செயல்படுவதற்கு பிற துறைகள் குறித்து பணியாற்றும் அளவிலான புரிதலை கொண்டிருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற் றுவதை ஒருவர் தேர்வு செய்யும்போது கிடைக்கும் பணம் / வருவாய் மட்டுமே அதனை தீர்மானிக்கும் ஒரே அளவுகோலாக இருந்திருக்கிறது.

ஆனால், இன்றைக்கு ஒரு நிறுவனத்தில் சேர்வ தற்கு அதிக சம்பளம் என்ற அம்சத்தையும் கடந்து ஒரு பெரிய குறிக்கோளை இன்றைய இளைய தலை முறையினர் தீவிரமாக விரும்புகின்ற ஒரு புத்துணர்வூட்டும் மாற்றம் நிகழ்ந் திருக்கிறது.

ஒரு நல்ல தொழில் நிறுவனத்தை உருவாக்குவதில் வெற்றி காண்பதற்கு, பிறர் சொல்வதை கவனமாக செவிமடுக்கும் திறனும் மற்றும் புரிந்துகொள்ளலும், அதனை செயல்படுத்தும் திறனுமே முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன என்றார்.

கோலியர்ஸ், இந்தியா நிறுவனத்தின் இண் டஸ்ட்ரியல் ஏம்ப் லாஜிஸ் டிக்ஸ் சர்வீசஸ் – ன் நிர்வாக இயக்குனரும், ஐஎஃப்எம்ஆர் ஜிஎஸ்பி- ன் முன்னாள் மாணவ ருமான ஷ்யாம் ஆறு முகம் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img